Translate

Saturday, July 19, 2014

வேட்டியும் அவை தீர்மானமும்

எனக்கு என்னவோ யாரோ ஒருவருடைய பழிவாங்கும் எண்ணமாக படுகிறது. நீதித்துறையை மட்டம் தட்ட வேண்டும் என்று யாரோ ஒருவர் விரும்பி இருக்ககூடும். அது நிகழ்த்த பட்டு இருக்கிறது. அவ்வளவே.
என்றாலும் கூட, சீண்டவேண்டும் என்று முயலும் போது சினந்து வெளிப்பட்டது தமிழரின் தன்மானம். எனவே வேட்டி என்பது அடையாளம். அதை தினமும் உடுத்துகின்றேன் அல்லது உடுத்தவில்லை என்பது கேள்வியல்ல.  கண்ணகியை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ? தமிழை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ?

தமிழ் நாட்டில் ரயில் வசதிகள் பற்றிய ஒரு பார்வை (தமிழக முதல்வர் அம்மாவின் பார்வைக்காக)


[1] திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு வண்டி (அ) விருதுநகர், மானாமதுரை , காரைக்குடி, புதுகோட்டை வழியாக, [மதுரை செல்லாமல்] சென்னைக்கு.  இதனால் திருநெல்வேலி பயணியர் மிகுந்த பலன் பெறுவர்.

[2]  போடி -மதுரை அகல ரயில் பாதை விரைந்து முடிக்கப்படல் வேண்டும்.

[3] செங்கல்பட்டு ஒரு முனையமாக அறிவிக்கப்படல் வேண்டும்.

Wednesday, June 25, 2014

[உண்டி= உணவு] 'அம்மா உணவகம்"

ஐயா, உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் ஆவர். , மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் [தொழிற்சாலைகளில்] பணி புரியும் அரசு ஊழியர்கள் சலுகை விலையில் காலை / மதியம் உணவும் காப்பி போன்ற பானங்களும் பெறுகின்றனர். மாதம் 1.5 லட்சம் அளவிற்கு சம்பளம் பெறுவோரும் மற்றோரும் பயன் பெறுகின்றனர்.
 [இட்லி =ரூபாய் நான்கு / பொங்கல் =ரூபாய் 10/- , மதிய உணவு ரூபாய் 20/- காபி ரூபாய் 5/-]
            [ இது கூடாது என்று சொல்ல வரவில்லை]
ஆனால் பொதுமக்கள் இந்த சலுகைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக தமிழக அரசு அளித்ததே 'அம்மா உணவகம்'  அரசு ஊழியரை போல் பொது மக்களும் பயன் பெறும் நோக்கில் வந்ததே 'அம்மா உணவகம்"

இதை பின்பற்றி நிச்சயமாக ஏற்புடை கட்டணத்தில் கல்வி கூடங்களும் / மருந்தகங்களும் வரும்.

Tuesday, June 24, 2014

SWM 2014 RAINFALL

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒழுங்காக பெய்யாது வறட்சியை உண்டுபண்ணிவிடுமோ என்ற பயம் இந்திய வேளாண் குடிகளிடைய ஏற்பட்டு உள்ளது.  அகில இந்திய அளவில் மழையானது -38 % [24.06.2014 :: செவ்வாய் : கணக்குப்படி] குறைவாய் பெய்து உள்ளது.  பல காரணங்கள் சொலப்படுகின்றன :
[1] சூன் 21 தேதி சூரியன் 23.5 வடக்கு அட்ச ரேகையில் -கடக ரேகையில்- இருந்தபோது இந்தியாவின் வடமேற்கு பகுதியை விட பெரும்பான்மை கீழைப் பகுதி இயல்பைவிட மிகுதியாக வெப்பமாயிற்று. 
வடமேற்கு இந்திய பகுதியில் வெப்பம் குறைவதற்கு  மேற்கிலிருந்து பயணித்த வானிலை தொந்தரவுகள் ஒரு காரணம் ஆகும்.
[2] தென் மேற்கு பருவகாற்றுக்கு அடிகோலும் மூலமான - "மோரிஷிஎஸ் ஹை " எனப்படும்  பெருங்காற்று உயர் மண்டலம் வழக்கமான இடத்தில வலுப்பெற்று [தெற்கு இந்திய பெருங்கடலில்] அமையவில்லை. 
[3] எல் நினோ எனப்படும் வானிலை சாபம் இன்னும் முழுமையாக உருபெறவில்லை. எனவே அதன் தாக்கம் என்றும்  சொல்லமுடியாது.
[4] கடனீர் வெப்பநிலை மாறுபாடும் பெரிய அளவில் இல்லை.
[5] சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் / [அயனம் ] ஆரம்பமாகிவிட்டது. தென் மேற்கு பருவமழையின் அடிநாதமாய் விளங்கும்  "மோரிஷிஎஸ் ஹை" நிச்சயம் வலுப்பெறும்.
[6] அப்போது சூலைத்திங்களில் நன்மழை கிட்டும்.

Monday, March 24, 2014

The perennial Rr Tamirabarani



தமிழகத்திலே தாமிரபரணி நதி ஒன்றுதான் வற்றாத ஜீவநதி. தென்மேற்குபருவகாற்று காலத்திலும் வடகிழக்கு பருவகாற்று காலத்திலும் மழை பொழிவை கொண்ட ஒரு நதி. இது 120 கி. மீ நீளம் கொண்ட நதி.  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிச்சயமாக நதியில் வெள்ளம் ஏற்றப்பட்டு விடும். அகத்தியர் மலையில் நதியை பார்த்து இருக்கிறேன், பாபநாசத்தில், அம்பாசமுத்திரத்தில், வீரவநல்லூரில், நெல்லையில், ஸ்ரீவைகுண்டத்தில், ஏரலில், புன்னைகாயலில் பர்ர்த்து பரவசப்பட்டு இருக்கிறேன்.  தண் எனத தழுவிக்கொள்ளும் தாமிரபரணித் தாயே வாழி நீயே !

Saturday, March 22, 2014

உலக வானிலை இயல் நாள்



உலக வானிலை இயல் நாள்
"உலக வானிலை இயல் நாள்" வரும் 24.03.2014 [திங்கள் கிழமை] இந்திய வானிலைஇயல் துறையினரால் விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது.
இவ்வாண்டின் கருதுகோள் :
வானிலையும் காலநிலையும் : இளையோரை ஈடுபடுத்துதல்
விழா நாள் சிறப்பு நிகழ்சிகள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும்.
(1)   மண்டல வானிலை மையம், எண்:6, கல்லூரிச் சாலை, சென்னை-6
      [இங்கு வானிலை பற்றிய படங்கள், கருவிகள் உள்ளடக்கிய கண்காட்சியும் உண்டு.]

(2)    வான்நிலை ஆய்வுகூடமும் அலுவலகங்களும், ஜி எஸ் டி நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை-27

(3)     டாப்ளர் ராடார் நிலையம், சென்னை துறைமுகம், சென்னை -1.

அன்றைய தினம் ஆய்வு மையத்தின் எல்லா பிரிவுகளும் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். நேரம்: காலை 1100 மணி முதல் 1700 மணி வரை.
அனைவரும் வருக.

Thursday, March 20, 2014

TAMIL AND SAMANAM

நான் அறிந்தவரையில் தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவன் 'நக்கீரன்' ஒரு மீனவ குலத்தவன்.
[உ. ம.] சங்கு அறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு எது குலம் என்பது ஒரு கருத்து. 
உண்மையிலைய சமணர்கள் தாம் தங்கள் மதத்தினை பரப்ப அந்தந்த பகுதி தாய் மொழியினை பயன்படுத்தினர். அந்த வகையில் தமிழுக்கான சமணர்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் ஆரிய சைவமும் / வைணவமும் சமணத்தை அழித்து விட்டன. சமணம் மட்டுமே தழைத்து இருந்தால் சாதிகள், மதங்கள் அற்ற மிகப்பெரிய சமுகத்தை நம்   கொண்டிருப்போம்.
ஆரியர்கள் அடிமைபடுத்தி பிறப்பு முதல் இறப்பு வரை ஆரியர்களை சார்ந்தே அண்டிப் பிழைக்கும் படி செய்து விட்டனர். அதனால் தான் ஆரியர்கள் மீது இன்னும் கடும் வெறுப்பு இருந்து வருகிறது.