Translate

Sunday, August 24, 2014

மரபணு மாற்றம்

ஆகாய தாமரை, சீமை கருவேல மரம் போன்றவை மக்களுக்கு பயன் அளிப்பதை விட ஊறு விளைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மரபணு மாற்றம் பற்றி ஆய்வு செய்பவர்கள் - ஆகாயத்தாமரை, சீமை கருவேல மரங்களில் - மரபணு மாற்றம் பற்றி ஆய்வு செய்து அத்தாவரங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றம் செய்து தர வேண்டும். இந்தியாவில் மரபணு மாற்ற ஆய்வுகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும் ஆய்வகங்களில் ஆய்வு செய்ய தடை இல்லை என்பதை அறிகின்றேன்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் அல்லது மற்ற உயர் கல்விக்கூடங்கள் இம்முயற்சிதனை மேற்கொள்ள முன்வரவேண்டும். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

Monday, August 18, 2014

ஆடிப்பெருக்கு

காவேரி நதி தீரம் [தலைமடை]பாகமண்டலாவில் இருந்து [கடைமடை]காரைக்கால் வரையிலும், அணையே இல்லாத போது, தென் மேற்குபருவகாற்று மலையில் மழையாக பெய்யும்போது நீர் பெருக்கு எடுத்தோடி வெள்ளமாய், காவிரியில் வரும் ஆடி 18டாம்  நாளே ஆடி பெருக்கு. 
அக்காலங்களில் நீர்விளையாட்டு மிகவும் பேர்போனது. இவ்வாறான ஒரு நிலையில் ஆட்டன்அத்தி என்னும் நீர்விளையாட்டு வீரனை கரிகால் பெருவளத்தான் மகள் ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி  நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெள்ளத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது.
தலைவனை வெள்ளம் அடித்து சென்றதால், புது மண தம்பதியர் தாலியை பிரித்து கட்டும் வழக்கம் நிலவிற்று என்பர்.

Saturday, August 16, 2014

Enhanced SWM


South Indian Ocean high pressure is in a  favorable location. 

As reported from a SHIP
(13.60N 59.90E)
Wind speed at 12 UTC 16 Aug 2014 was
34 knots or 18 m/s from 230 degrees or SW
As a result enhanced rainfall activity below 13 Degree and above 09 Deg will be there in Tamil Nadu

Saturday, August 9, 2014

PRAY FOR ACTIVE SWM RAINFALL

090814 16LT Mascarene High
090814 20LT CMA imagery
cloud height 090814 1117Z
INSAT PIX090814 




From these imagery one can infer that SWM may become moderately active over Kerala coast, Karnataka coast and Tamilnadu.

[090814] Today night (or tomorrow early morning)  there may be possibilities that rain may be rain south of Tambaram Cheyyur and Permbalur district and  along 10 Deg Parallel .

Let the rain God be blessing to TN and Kerala and Karnataka

why the entire NATION.
PRAY FOR THAT.

Director -actor Parthiban

பார்த்திபனார் [பார்த்திபன் ஆர் ]அவர்களே , வரும்படி சொன்னவருக்கே "வரும்படி" கொடுப்பவரே , நெறைய எதிர் பார்க்கிறோம் உங்களிடம்.

Sunday, July 20, 2014

Festivals

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட மிகக்குறைந்த  தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஜனவரியில்  மூன்றாம்  நாள்  ஏற்படும்.  எனவே உலகெங்கும் ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடபடுகிறது. "அயனம்" என்பது பாதை / பயணம்  ஆகும். சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் [உத்தர அயனம்] ஜூன் 21 இல் 23.5 வடக்கு அட்சரேகையில்[கடக ரேகை]  முடிந்து அதன் தெற்கு நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.  அதே போல் டிசம்பர் 21 இல் 23.5 தெற்கு அட்சரேகையில் [மகர ரேகை]சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் [தட்சண அயனம்] முடிந்து அதன் வடக்கு  நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.. மகர ரேகையில் இருந்து மீண்டு  சூரியன் மேலே வரும் போது பூமிக்கு அருகில் சூரியன் வந்து விடுவதால் சூரியனுக்கு வணக்கம் செலுத்தினர் தமிழர். அதுவே கதிரவ வழிபாடு என்னும் தை முதல் நாள்.

Saturday, July 19, 2014

வேட்டியும் அவை தீர்மானமும்

எனக்கு என்னவோ யாரோ ஒருவருடைய பழிவாங்கும் எண்ணமாக படுகிறது. நீதித்துறையை மட்டம் தட்ட வேண்டும் என்று யாரோ ஒருவர் விரும்பி இருக்ககூடும். அது நிகழ்த்த பட்டு இருக்கிறது. அவ்வளவே.
என்றாலும் கூட, சீண்டவேண்டும் என்று முயலும் போது சினந்து வெளிப்பட்டது தமிழரின் தன்மானம். எனவே வேட்டி என்பது அடையாளம். அதை தினமும் உடுத்துகின்றேன் அல்லது உடுத்தவில்லை என்பது கேள்வியல்ல.  கண்ணகியை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ? தமிழை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ?