Translate

Sunday, July 20, 2014

Festivals

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட மிகக்குறைந்த  தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஜனவரியில்  மூன்றாம்  நாள்  ஏற்படும்.  எனவே உலகெங்கும் ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடபடுகிறது. "அயனம்" என்பது பாதை / பயணம்  ஆகும். சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் [உத்தர அயனம்] ஜூன் 21 இல் 23.5 வடக்கு அட்சரேகையில்[கடக ரேகை]  முடிந்து அதன் தெற்கு நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.  அதே போல் டிசம்பர் 21 இல் 23.5 தெற்கு அட்சரேகையில் [மகர ரேகை]சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் [தட்சண அயனம்] முடிந்து அதன் வடக்கு  நோக்கிய பயணம் அடுத்த நாள் ஆரம்பமாகி விடும்.. மகர ரேகையில் இருந்து மீண்டு  சூரியன் மேலே வரும் போது பூமிக்கு அருகில் சூரியன் வந்து விடுவதால் சூரியனுக்கு வணக்கம் செலுத்தினர் தமிழர். அதுவே கதிரவ வழிபாடு என்னும் தை முதல் நாள்.

No comments: