யானைகளுக்கும் வலசை போதல் உண்டு. இந்த
வலசை போகும் பாதை, மாதம், நேரம் பற்றிய அறிவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை
போகும். இது அப்போதைய வானிலையை பொருத்து முன் / பின் மாறுபடும். யானைகளுக்கு இது
காடு அல்லது இது நாடு என்று எல்லாம்
தெரியாது. மனிதர் இடை படும் போது இடர் ஏற்படுகிறது. இது மனிதன் - விலங்கு சண்டை
ஆகிவிடுகிறது.
வனத்துறை "அறிவியல் முறையில்" யானைகளை அப்புறப்படுத்தும் வழிகளை
அறிந்து இருக்கவில்லை. எப்படி தற்காத்து கொள்வது ?
[1] மிகவும் பொடியாக்கப்பட்ட மிளகாய் வற்றல் தூளை யானை பாதைகளில் தூவியும் அது
உண்வாய் கொள்ளும் உணவு பொருள்கள் மீது தூவியும் விட்டால் அதனை உண்ட யானைகள் நெடி
காரணமாயும் காரம் காரணமாயும் மீண்டும் வராது.
[2] தீயில் மிளகாய் பொடியை தூவி நெடி ஏற்றினாலும் வராது
3] சக்தி வாய்ந்த லேசர் ஒளி கற்றைகள்
மூலம் யானையின் முகத்தில் படும்படி ஒளி நடனம் நடத்தினால் யானை மிரளும்.
[4] ஊருக்குள் போகாமல் தடுக்க இரும்பு ஆணி படுக்கைகளை விரித்தால் யானை மட்டும்
அல்ல மிருகங்கள் எளிதில் வராது.
[5] மலை மாவட்ட மக்கள் தற்காத்து கொள்ள இந்த தகவலை அதிகம் பகருங்கள்.
No comments:
Post a Comment