Translate

Thursday, February 21, 2013

பார்ப்பனியத்துக்கு எதிராக பேசுவது மட்டுமே சாதி ஒழிப்பா?





பார்ப்பனியத்துக்கு எதிராக பேசுவதன் மூலம் பல பேர் முற்போக்காளர்களாக உலா வருகிறார்கள். பெரியார் பார்ப்பனியத்தை மட்டுமா ஒழிக்கச்சொன்னாரு.. எல்லா சாதி வெறியையும் தான் ஒழிக்கச் சொன்னாரு..


ஆனால் பெரியார் யாருக்காக சாகும் வரை மூத்திரப்பையோடு சாதிக்கு எதிராக போராடினாரோ.. அவர்களே பெரியாரின் முதுகில் குத்தினார்கள்.

பார்ப்பனியத்திற்கு எதிராக சவுண்ட் விடும் திராவிட கட்சிகளும் சரி, தமிழ்த்தேசிய கட்சிகளும் சரி இந்த இடைநிலை சாதிவெறியர்களுக்கு எதிராக வாயைத் திறக்க மாட்டார்கள்.. அட பெரியார் நடத்துன திராவிடர் கழகம் (இப்போ கம்பெனி) கூட வாயைத் திறக்காது..

அதிலும் கார்ட்டூன்ல ரெண்டாவதா நிக்கானே முற்போக்கு ஆசாமினுஒருத்தன்.. முன்னாடி நிக்குறவனை விட இவன் தான் ரொம்ப ஆபத்தானவன்.. ( இந்த முற்போக்கு முகத்திற்குள் சாதிவெறி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.. நல்லா உத்துப்பாருங்க.. ஒவ்வொரு முகமும் பல்லக்காட்டும்.. )

No comments: